மண்டபம் மீனவர்களுக்கு டிச., 27 வரை காவல் நீட்டிப்பு
மண்டபம் மீனவர்களுக்கு டிச., 27 வரை காவல் நீட்டிப்பு
ADDED : டிச 21, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு காவலை நீட்டித்து, டிச., 27 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச., 8ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரூஸ் ஆகியோரது இரு படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் சிறை பிடித்து, 8 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 8 பேரையும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் டிச.,27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மீனவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.