ADDED : மார் 19, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு, பா.ம.க., உட்பட 17 பதிவுபெற்ற அரசியல் கட்சிகளுக்கு, பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு, அக்கட்சிகளின் சின்னம் தேர்தலில் ஒதுக்கப்படும். பதிவுபெற்ற கட்சிகள், தேர்தலில்பொது சின்னம் பெற, தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் சில விதிமுறைகள் அடிப்படையில், அக்கட்சிகளுக்கு பொது சின்னம் வழங்கும். அந்த வகையில், லோக்சபா தேர்தலில், பா.ம.க.,வுக்கு அக்கட்சியின் சின்னமான மாம்பழம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட்; நாடாளும் மக்கள் கட்சிக்கு ஆட்டோ ரிக் ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, மேலும், 14 கட்சிகளுக்கு பொது சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.

