துபாயில் வரும் 29 முதல் மணிமேகலை பிரசுரம் புத்தக கண்காட்சி
துபாயில் வரும் 29 முதல் மணிமேகலை பிரசுரம் புத்தக கண்காட்சி
ADDED : ஜன 26, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மணிமேகலை பிரசுரம் சார்பில், துபாயில் புத்தக விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது.
தமிழின் பிரபல பதிப்பகமான மணிமேகலை பிரசுரம், தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் புத்தக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில், துபாயில் வரும் 29ம் தேதி முதல் பிப்., 5 வரை புத்தக விற்பனை கண்காட்சி நடத்த உள்ளது. அங்குள்ள பர் துபாயில், அல் தவ்ஹிடி பில்டிங், காலித் வாலீட் சாலையில் உள்ள எம்.டி.ஆர்., உணவகத்தின் மேல், புத்தக விற்பனை கண்காட்சி நடக்கிறது.
ஐந்து நாள் கண்காட்சியில், 'அந்துமணியின் கேள்வி பதில்கள்' எட்டு பாகங்களும், 'பார்த்தது கேட்டது படித்தது' நுாலின் 23 பாகங்களும், ஏழு வகையான பயண நுால்களும் இடம்பெற உள்ளன.

