மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக மணிவண்ணன் நியமனம்
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக மணிவண்ணன் நியமனம்
ADDED : ஜன 10, 2025 11:31 PM
சென்னை:தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல், மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான வழக்கை விசாரித்தல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது.
நீதிமன்ற அதிகாரம் உடைய ஆணையம், ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. அதன்படி, ஆணையத்தின் தலைவராக இருந்த சந்திரசேகர், 2024 ஆக., 15ல் ஓய்வு பெற்றார். புதிய தலைவரை தேர்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், ஆணையத்தின் தலைவராக மணிவண்ணன், நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். அன்று பிற்பகல் முறைப்படி பொறுப்பேற்றார். மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் பகிர்மான கழக இயக்குனராக இருந்த மணிவண்ணன், 2024 மே மாதம் ஓய்வு பெற்றார்.
ஆணைய தலைவர் பதவிக்கு பலர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பரிந்துரையில், மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

