ADDED : பிப் 06, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, மார்ச் 1ல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும்' என, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம், நடக்க உள்ளது. சென்னை போன்று ஏதேனும் ஒரு நகரப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேரணி துவங்கும் இடம், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் ஆகியவை, விரைவில் அறிவிக்கப்படும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

