ADDED : நவ 13, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, கோவாவைச் சேர்ந்த, அகில இந்திய காங்., செயலர் கிரிஷ் சோடங்கர் உள்ளார்.
அவரது தலைமையின் கீழ், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சூரஜ் ஹெக்டே கூடுதல் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
தற்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் மேலிட கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, 3 பொறுப்பாளர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், சூரஜ் ஹெக்டே மாற்றப்பட்டு விட்டதாக கூறப்பட்ட தகவல் உண்மையல்ல என்பது தெரிய வந்துள்ளது.

