sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார் கழி வழிபாடு -25

/

மார் கழி வழிபாடு -25

மார் கழி வழிபாடு -25

மார் கழி வழிபாடு -25


ADDED : ஜன 08, 2025 06:54 PM

Google News

ADDED : ஜன 08, 2025 06:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 25


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர் வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 5


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக்கண்டறிவாரைசீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்துஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.






      Dinamalar
      Follow us