sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார் கழி வழிபாடு -14

/

மார் கழி வழிபாடு -14

மார் கழி வழிபாடு -14

மார் கழி வழிபாடு -14


ADDED : டிச 27, 2024 06:54 PM

Google News

ADDED : டிச 27, 2024 06:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்

பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன்மனை நாடிய ராவணனின் தலையை கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடிய படியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது.

வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, துாக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

திருவெம்பாவை - பாடல் 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்தபொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்

விளக்கம்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்தநிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் 'நமசிவாய' என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.






      Dinamalar
      Follow us