UPDATED : டிச 26, 2025 11:01 PM
ADDED : டிச 26, 2025 10:58 PM

திருப்பாவை - பாடல் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றன. இந்தளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்?.
திருவெம்பாவை - பாடல் 12
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பபூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளை கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ளஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, 'சிவாயநம' என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.
