sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 டிரைவிங் சோதனை மையங்கள் துவக்கியது மாருதி சுசூகி

/

 டிரைவிங் சோதனை மையங்கள் துவக்கியது மாருதி சுசூகி

 டிரைவிங் சோதனை மையங்கள் துவக்கியது மாருதி சுசூகி

 டிரைவிங் சோதனை மையங்கள் துவக்கியது மாருதி சுசூகி


ADDED : பிப் 28, 2026 06:10 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உயர் தொழில்நுட்ப உணர்வு கருவிகள் வாயிலாக, ஓட்டுநரின் டிரைவிங் திறனை துல்லியமாக சோதித்து அறியக்கூடிய, ஏழு தானியங்கி 'டிரைவிங்' சோதனை மையங்களை, மாருதி சுசூகி நிறுவனம் தமிழகத்தில் துவக்கி உள்ளது.

சி.எஸ்.ஆர்., எனும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், தமிழக அரசின் போக்குவரத்து துறையுடன் மாருதி நிறுவனம் இணைந்து இந்த மையங்களை அமைத்து உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் இந்த டிரைவிங் சோதனை மையங்களை துவக்கி வைத்தார்.

இந்த தானியங்கி சோதனை மையங்கள், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனைகளை மிக துல்லியமாக நடத்த உதவும். மேலும், இது சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us