அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
ADDED : ஜூன் 27, 2025 03:23 AM
திருச்சி:திருச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
*மத்திய பா.ஜ., அரசு, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது
*போராடி பெற்ற சட்ட உரிமைகளை பறித்து சுரண்டலை தீவிரப்படுத்தும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசின் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்குமாறு கட்டாயப்படுத்துகிறது
*மத்திய அரசின், இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து, ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது
*சமஸ்கிருதத்துக்கு அதீத நிதியும், வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிக குறைவான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது
*தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
* ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்
*அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் டயாலிசிஸ் சிகிச்சை செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தினால், இலவசமாக தரமான சிகிச்சை கிடைக்காமல் போகும். எனவே, தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.

