கொடிக்கம்பங்கள் அகற்றத்தை நிறுத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
கொடிக்கம்பங்கள் அகற்றத்தை நிறுத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
ADDED : மே 18, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தலைமைச் செயலர் முருகானந்தத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் சந்தித்துப் பேசினார்.
பின், அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இதில் தீர்ப்பு வரும் வரை கொடிக்கம்பங்களை அகற்றுவதை நிறுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடிய அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்தினோம்.
எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்த தலைமைச் செயலர், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.