போராட்டங்களை தடுக்காதீர்கள் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
போராட்டங்களை தடுக்காதீர்கள் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2025 11:47 PM
சென்னை:சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சின்னதுரை பேசியதாவது:
தமிழகத்திற்கான நிதியை ஒதுக்காமல், மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியைக்கூட, மத்திய பா.ஜ., அரசு நிலுவையில் வைத்துள்ளது.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் முழுமையாக கவனம் செலுத்தி, மத்திய அரசிடம் இருந்து நிலுவைத் தொகையைப் பெற வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் சரண்டர் விடுப்பு பணப்பலனை, இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தினமும் பல்வேறு துறையினர் போராடி வருகின்றனர்.
போராடும் ஊழியர்களை காவல் துறையை கொண்டு தடுத்து நிறுத்துவதை தவிர்த்து, அவர்களின் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் நலன், தொழிற்சங்க உரிமை, கூட்டுப்பேர உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் பணிகளால், சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.