ADDED : ஏப் 21, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'மே தினத்தையொட்டி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மே 1 அன்று, மே தினவிழா பொதுக்கூட்டம் நடக்கும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மே தினத்தை கொண்டாடும் வகையில், மே 1 அன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டம் நடக்கும். இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பேசுவர். கட்சியினர் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ள நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுச்செயலர் பழனிசாமி பெயர் இடம் பெறவில்லை. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பெயர், பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

