உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 13, 2026 07:11 AM

அ நிறம் | அளவு
கவர்ச்சி அரசியல், பொய் பேசுதல், பாட்டு பாடுதல், அரசியல் நாகரிகமற்ற பேச்சு எங்களுக்கு தெரியாது. அநாகரிகமான ஒருவர் ஆட்சி கட்டிலில் இருக்கிறார்.
'முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஓடுகிறார்' என முதல்வர் விஜய் சொல்கிறார். ஒரு வழக்கு போடும்போது, அதில், ஜாமின் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம்.
முன்னாள் அமைச்சர் வேலு, சிகிச்சைக்கு சிங்கப்பூர் செல்லும் நாளில், சோதனை நடத்தினீர்கள். அதனால் அவர், இரண்டு நாட்கள் கழித்து சிங்கப்பூர் சென்றார். இது தெரியாமல் ஒரு முதல்வர் பேசுகிறார். காமராஜர், அண்ணாதுரை, ராஜாஜி இருந்த இடத்தில் ஒரு பொய்யர் முதல்வராக இருக்கிறார்.
'பார்ட்டி பண்டு' என சொல்லிவிட்டு, எந்த பார்ட்டி என்று சொல்ல முதுகெலும்பு இல்லாதவர், முதல்வர் விஜய். பொய், பொய்யாக பேசும் நாகரிகம் இல்லாதவர்களின் அநாகரிக ஆட்சியை அப்புறப்படுத்துவோம்.
- ராஜா, துணை பொதுச்செயலர், தி.மு.க.,
