தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கும்

 மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கும்

 மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கும்


ADDED : ஜூலை 13, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியல் இயக்கத்தின் வெற்றி, ஆட்சியை பிடிப்பது மட்டும் இல்லை. அதிகாரத்திற்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகார மையத்தையும் இயங்க செய்வதே உண்மையான வெற்றி. அந்த வகையில், தமிழக அரசியலில் பா.ம.க., பெரும் வெற்றி பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணிதான், ஆட்சிக்கு வரும் என உறுதியாக நம்பினோம். ஆனால், யாருமே எதிர்பாராத அலை வீசியதால், எல்லாம் மாறின. எனினும், நாம் வலுவாக உள்ள பகுதிகளில், அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35க்கும் அதிகமான இடங்களில், நம் கூட்டணி கட்சி வெற்றி பெற, நாம்தான் காரணம்.
ஆட்சியில் இல்லை என்றாலும், மக்களுக்காக களமிறங்கி போராடுவதில் பா.ம.க., தான் உண்மையான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி, மக்களின் உரிமைகளை போராடி பெற்று தரும் நிலையிலேயே தொடர முடியாது; மக்கள் தேவைகளை நிறைவேற்றி தரும் நிலையை எட்ட வேண்டும். பா.ம.க.,வின் 38ம் ஆண்டு, புதிய தொடக்கமாக அமையும். இந்த ஆண்டில் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us