ADDED : ஆக 28, 2025 01:22 AM

சென்னை: 'பீஹார் பயணம், ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானத்தை வழங்கட்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் பீஹார் சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதி மரம், அம்மாநிலத்தின் புத்த கயாவில் இருந்தது. அதேபோல், சமூக நீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், ராம் அவதேஷ் சிங், சரத் யாதவ், லாலு பிரசாத், நிதிஷ் குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பீஹார் தான்.
இந்தியாவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விபரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீஹார் தான். அத்தகைய சிறப்பு மிக்க பீஹார் மண், முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சென்னை திரும்பியதும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

