'எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்' அட்டவணை மாற்றி வெளியீடு
'எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்' அட்டவணை மாற்றி வெளியீடு
ADDED : ஆக 07, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு பொதுப்பிரிவு கவுன்சிலிங், கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, மாற்றி அமைக்கப்பட்ட முதல் சுற்று கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, 'மாணவர்கள் தங்களின் விருப்பக் கல்லுாரிகளை, வரும் 12ம் தேதி மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம். மாணவர் சேர்க்கை ஆணை, வரும் 14ம் தேதி வெளியிடப்படும்.
'முதல் சுற்றில் சேர்க்கை ஆணை பெற்றவர்கள், 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும்' என, மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தி உள்ளது.

