ADDED : டிச 07, 2024 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கை:
எதிர்வரும், 2025 - 26ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லுாரிகளை துவங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், கடந்த, 5ம் தேதியுடன் முடிவடைந்தது. அதை நீட்டித்து, 2025 ஜனவரி, 4ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
ஆணைய விதிப்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். நேரடி ஆய்வு வாயிலாக மதிப்பீடு செய்யப்பட்டு, அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சான்று, இணைப்பு கல்லுாரி ஒப்புகை சான்று, மருத்துவமனை விபரங்கள், கல்வி கட்டண விபரங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.