ADDED : ஆக 05, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்சியின் மாநில பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பியபோது நடந்த விபத்தில், மூன்று நிர்வாகிகள் பலியான சம்பவம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் கட்சியின் முதன்மை செயலர் துரை மதுரைக்கு வந்தார். பலியானவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காயமடைந்த பிரபாகரனை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் பூமிநாதன் எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் மஹபூப்ஜான், முனியசாமி உட்பட பலர் சென்றனர்.