ADDED : ஏப் 17, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:சட்டசபையில் நேற்று, சமூக நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய, ம.தி.மு.க., -- எம்.எல்.ஏ., பூமிநாதன், 'எங்கோ சென்று கொண்டிருந்த நான், இந்த அளவுக்கு வந்திருப்பதற்கு என் மனைவியே காரணம். அவர் வீட்டை விட்டு எங்கும் செல்லாதவர். அதனால் தான், என்னால் பொது வாழ்க்கையில் ஈடுபட முடிகிறது. என் மனைவிக்கு நன்றி' என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பூமிநாதனின் மனைவி, பார்வையாளர் மாடத்திலிருந்து, கணவர் பேசுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று, சுட்டிக்காட்டினார்.