UPDATED : மே 06, 2025 08:36 AM
ADDED : மே 06, 2025 07:52 AM

சென்னை: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
வைகோ அண்மைக்காலமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். கடந்தாண்டு இதே மே மாதத்தில் கால் இடறி விழுந்ததில் இடதுதோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தார்.
இந் நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வைகோ தற்போது சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் அடைந்ததாக தெரிகிறது.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வைகோ மருத்துவமனையில் இருப்பதை அறிந்த தொண்டர்கள் கவலை கொண்டு அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.