ADDED : அக் 24, 2025 12:39 AM
சென்னை:அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில், மாணவ, மாணவியர் சேருவதற்கு, நவ., 14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 5,944 மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட மாணவ, மாணவியர் சேர்க்கை, மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் நடந்த நிலையில், 1,316 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதம் 4,628 மருத்துவ இடங்கள் நிரம்பாததால், அந்தந்த மருத்துவ கல்லுாரிகள் வாயிலாக, அக்., 10க்குள் மாணவ, மாணவியர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.
இதன்பின், வரும், 31ம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் இன்னும் நிரம்பவில்லை. இதனால், சான்றிதழ் படிப்புக்கான மாணவ, மாணவியரை சேர்க்க, நவ., 14 வரை அவகாசம் வழங்கி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.