ADDED : டிச 23, 2025 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் , கேரள முதல்வர் பினராயி விஜயன், 80, நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, காலை முதல் மாலை வரை, பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பரிசோதனை முடிந்த நிலையில், மாலையில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆண்டுதோறும் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வார். அந்த பரிசோதனை தான் அவருக்கு செய்யப் பட்டது' என்றனர்.

