ADDED : ஆக 29, 2011 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர் : வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தூக்குத் தண்டனை கைதிகளுக்கு, மருத்துவப் பரிசோதனை நடந்தது.
வேலூர் சிறையில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ள, ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு,நேற்று காலை உணவு சாப்பிட்ட பின், சிறை மருத்துவ அதிகாரிகள், மருத்துவப் பரிசோதனை செய்தனர். மூன்று மணி நேரம், இந்த மருத்துவப் பரிசோதனை நடந்தது. மூவரும் நலமாக இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். தூக்கு போடப்படும் நபர், உடல் நலத்துடன் இருந்தால் தான், தூக்கில் போட வேண்டும் என்ற, சிறை விதி இருப்பதால், இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. 10 மருத்துவ அதிகாரிகள், இந்தப் பரிசோதனையைச் செய்தனர்.