உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 12, 2026 11:14 PM

அ நிறம் | அளவு
சென்னை: ஊதியத்தை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரி, 'மக்களை தேடி' மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஓமந்துாரார் தோட்டம், சிவானந்தா சாலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, 'மக்களை தேடி' மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர், ஊதிய உயர்வு, பணி நேரத்தை வரைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''மாதம் 5,500 ரூபாய் சம்பளம் என்ற நிலையில், கூடுதல் செலவுகளையும் பார்த்துக் கொள்வது சிரமமாக உள்ளது. எனவே, சம்பளத்தை 15,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
