மழைக்கால காய்ச்சல் பாதிப்பு கண்காணிக்க மருத்துவ குழுக்கள்
மழைக்கால காய்ச்சல் பாதிப்பு கண்காணிக்க மருத்துவ குழுக்கள்
ADDED : அக் 14, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாவட்ட நிர்வாகங்களுக்கு, பொதுசுகாதாரத் துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகம் முழுதும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், பருவமழை மற்றும் பேரிடர் கால தொற்று நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.
இதைத் தடுக்க, மாவட்ட மருத்துவ குழுக்களை உருவாக்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார மாவட்டம், வட்டாரங்களில், 24 மணி நேரமும் செயல்படும் விரைவு சிகிச்சை குழுக்களை அமைக்க வேண்டும்.
மழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த் தொற்றுகளுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.