ADDED : மார் 04, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மேளக்கலைஞரை முன்விரோதத்தில் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த 7 பேரை போலீசார் தேடுகின்றனர்.
தூத்துக்குடி அமுதாநகரை சேர்ந்தவர் கருப்பசாமி 25. மேளக்கலைஞர். இவருக்கும் நண்பர்களுக்கும் இடையே 2022ல் தகராறு ஏற்பட்டது.
இதில் கருப்பசாமி தாக்கப்பட்டார். போலீசார் சிலரை கைது செய்தனர். அந்த வழக்கு தற்போது தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் சாட்சிசொல்லக்கூடாது என அவரை சிலர் மிரட்டி வந்தனர்.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று பகலில் தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமியை வீடு புகுந்து சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இது தொடர்பாக கருப்பசாமி நண்பர்களான ராஜா, அருண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தேடுகின்றனர்.

