sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ 'வழிகாட்டி' நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

 'வழிகாட்டி' நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

 'வழிகாட்டி' நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி


ADDED : மார் 30, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 01:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வளசரவாக்கத்தில் உள்ள, அவர் ஏஞ்சல் பள்ளியில் கணினி அறிவியல் படிக்கிறேன். 'சைபர் செக்யூரிட்டி' படிக்க விரும்புகிறேன். படிப்பு மட்டும் போதாது, திறன்களை கற்க வேண்டும் என்பது, இங்கே வந்த பிறகே தெரியவந்தது.

-எஸ்.அபர்ணா, வளசரவாக்கம்.

பி.டெக்., -- சி.எஸ்.சி., படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். வழிகாட்டி நிகழ்ச்சி வாயிலாக, சி.எஸ்.சி., படிப்போடு தொடர்புடைய வேறு சில படிப்புகளையும் தெரிந்து கொண்டேன்.

- பி. பெஞ்சமின், வேளச்சேரி.

திருத்தங்கல் நாடார் வித்யாலயாவில், 'பயோ மேத்ஸ்' படிக்கிறேன். இ.சி.இ., படிக்க முடிவு செய்துள்ளேன். இங்கு, ஜே.இ.இ., மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள் குறித்த தெளிவு கிடைத்தது. ஜெயப்பிரகாஷ் காந்தி கூறிய ஏ.ஐ., குறித்த தகவல்கள் பயனளித்தன.

- கு.ஜீவிதா, திருவொற்றியூர்.

'நீட்' தேர்வு எழுதி டாக்டர் ஆவதே என் லட்சியம். அது குறித்த பல தெளிவுகள் வழிகாட்டியில் கிடைத்தன. நிகழ்கால கல்வி நிலையங்கள் குறித்த நடைமுறைகளை, அஸ்வின் போட்டுடைத்தது பிடித்தது.

- தருணிகா, திருவொற்றியூர்.

மதுராந்தகத்தில் உள்ள வி.ஜி.என்.மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 15 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக உள்ளேன். எட்டு பிளஸ் 1 மாணவர்கள் வந்துள்ளனர். பிளஸ் 2வில் எப்படி நம்மை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக அழைத்து வந்துள்ளேன்.

- ஜி.பாலகுரு, 34. மதுராந்தகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us