ADDED : செப் 22, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி நகர உதவி கமிஷனராக இருந்த காமேஸ்வரன், விருதுநகருக்கு மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் டி.எஸ்.பி., பழனிகுமார் கோவைக்கும், தர்மபுரி டி.எஸ்.பி., ஜெகநாதன், திருப்பத்துாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி டி.எஸ்.பி., சந்திரமோகன், நாகைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகேயுள்ள கடைகளில் சோதனை நடத்த, அரசு சார்பில், 391 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், 2023 நவ., 19 முதல் இந்தாண்டு செப்., 14 வரை, 2.08 லட்சம் கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளன. 21,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை சார்பில், 17.02 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 10,155 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.