ADDED : பிப் 16, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சார்பில் , 3,400 கடைகளில், இரு ஆண்டுகளுக்கு மதுக்கூடம் நடத்த அனுமதி வழங்க, 2023 அக்டோபரில், 'டெண்டர்' கோரப்பட்டது.
அதில், 1,600 கடைகளுக்கு டிசம்பரில் அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற கடைகளில், முறைகேடாக மதுக்கூடம் செயல்படுவதை தடுக்க, அதை நடத்துவதற்கு உரிமம் வழங்க சமீபத்தில் மீண்டும் இணையதள டெண்டர் கோரப்பட்டது.
அதில் தேர்வான, 1,100 கடைகளுக்கு நேற்று முன்தினம் டாஸ்மாக் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியால், டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.