மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 20, 2025 09:03 AM

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களாக, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 20) காலை முதல் வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், 16 கண் மதகுகள் வழியாக அதிகமான உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.