நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை; உபரி நீர் திறக்க வாய்ப்பில்லை!
நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை; உபரி நீர் திறக்க வாய்ப்பில்லை!
UPDATED : டிச 31, 2024 03:47 PM
ADDED : டிச 31, 2024 09:43 AM

சேலம்: 120 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட மேட்டூர் அணையில், இன்று (டிச.,31) காலை 8 மணி நிலவரப்படி, 119.97 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த ஜூலை, 30ல் அணை, 120 அடியான முழு கொள்ளளவை எட்டியது. மீண்டும் ஆக.,12ல், 2வது முறை, 120 அடியை எட்டியது. அதன் பின் நீர்வரத்து சரிந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ச்சியாக டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த அக்.,18ல் அணை நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது.
இந்நிலையில், 133 நாட்களுக்குப் பின்பு இன்று (டிச.,31) மாலை நடப்பாண்டு 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் நிலை உள்ளது. அணையை பார்வையிட்ட நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன் குமார், 'நீர்வரத்து குறைவாக இருப்பதால் உபரிநீர் திறக்க வாய்ப்பில்லை' என்றார்.
காலை 8 மணி நிலவரப்படி, 119.97 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து 2875 கன அடியாக உள்ளது. விநாடிக்கு, 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.