மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஜன 03, 2025 09:26 AM

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த ஆண்டு ஜூலை, 30ல் அணை முதல்மு-றையாகவும், ஆக., 12ல், 2ம் முறையாகவும் அணை நிரம்பியது. கடந்த ஆண்டு டிச., 31ல், மேட்டூர் அணை, 3ம் முறை நிரம்பி-யது. தொடர்ந்து உபரிநீரை, சேலம் மாவட்டத்தின் வறண்ட ஏரிகளுக்கு, திப்பம்பட்டி நீரேற்று நிலையம் மூலம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜன.,03) அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 1,992 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. 300 கனஅடி நீர் கால்வாயிலும் திறக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119.76 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

