ADDED : நவ 13, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூரில், மின் வாரியத்திற்கு, 600 மெகா வாட் திறனில், மேட்டூர் விரிவாக்க, அனல்மின் நிலையம் உள்ளது.
அங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின், மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், மேட்டூர் விரிவாக்க மின் நிலைய அலகில் பழுது காரணமாக, நேற்று முன்தினம் மாலை முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

