கூகுளுக்கு வழங்கிய இடம் 'பாக்ஸ்கானுக்கு' ஒதுக்கீடு
கூகுளுக்கு வழங்கிய இடம் 'பாக்ஸ்கானுக்கு' ஒதுக்கீடு
ADDED : நவ 13, 2025 01:59 AM
சென்னை: தமிழக வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில், 'கூகுள்' நிறுவனத்திற்கு வாடகை எடுக்கப்பட்ட இடம், 'பாக்ஸ்கான்' நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட உள்ளது.
500 - 600 சதுர அடி அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவன முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் அதிகாரிகள் குழு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றது.
அப்போது, ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க, சென்னை தேனாம்பேட்டை தனியார் வளாகத்தில், 11வது தளத்தில் உள்ள வழிகாட்டி நிறுவன தலைமை அலுவலகத்தில், கூடுதலாக 500 - 600 சதுர அடி வாடகைக்கு எடுக்கப்பட்டு, கூகுள் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சு நடத்தியும், இன்னும் ஆய்வகம் அமைக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபடாமல் உள்ளது.
அதிக முதலீடு அதேசமயம், அந்நிறுவனத்திற்காக கூடுதலாக பெறப்பட்ட இடத்திற்கு வாடகை மட்டும் செலுத்தப் படுகிறது. 'ஆப்பிள்' போன்களின் உதிரிபாகங்களை ஒருங்கிணைக்கும், தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இதனால், கூகுளுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட கூடுதல் இடத்தை, பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

