ADDED : ஜன 15, 2026 02:41 AM
தி.மு.க., அரசின் திட்டங்களான விடியல் பயணம், மகளிர் உதவித்தொகை, பொங்கலுக்கு 3,000 ரூபாய் என, அனைவரும் அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். இதை ஓட்டு அரசியல் என்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள், 59,000த்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது.
ஆனால், அவர்களுக்கும், பொங்கல் பண்டிகை கொண்டாட, 3,000 ரூபாய், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அவர்கள் அனைவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்தில் புலம் பெயர்ந்து வந்தவர்கள். அப்போது, அவர்களை, எம்.ஜி.ஆர்., தகர கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார். அவை, நம் வீட்டிலுள்ள கழிப்பறையின் அளவு தான் இருக்கும். ஆனால், முதல்வர் ஸ்டாலின், 640 கோடியில், 10,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். அவர்களுக்கு ஊக்கத்தொகை, இலவச அரிசி, காஸ், உடைமைகளை நாம் வழங்கி வருகிறோம்.
- நாசர், தமிழக அமைச்சர், தி.மு.க.,
