ADDED : டிச 15, 2024 01:33 AM
ராணுவ மருத்துவமனைகளுக்கு அடிக்கடிச் செல்லும்போது, போரில் ஊனமுற்ற வீரர்கள் செயற்கை உறுப்புகளுடன் போராடுவதைக் கண்ட சித்தாந்த், ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக, வகுப்புத் தோழரான தீபன்ஷ் கோயலுடன் இணைந்து சிந்தனையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை உறுப்புகளை உருவாக்கினார். மூளை அலைகளைப் பற்றக்கூடிய நம்பக சாதனங்களை உருவாக்குவதில் இருவரும் வெற்றி பெற்றவுடன், 2020ல் 'நெக்ஸ்டெம்'(Nexstem) என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை நிறுவினர்.
'ஸ்டார்ட் அப்'பின் முதன்மைத் தயாரிப்பு நெக்ஸ்டெம் வி1 இ.இ.ஜி., ஹெட்செட்கள் ஆகும்; இவை இ.இ.ஜி., இ.சி.ஜி., மற்றும் இ.எம்.ஜி., போன்ற பயோ-சிக்னல்களைப் பெறவும், பகுப்பாய்வு செய்யவும், தொடர்புகொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இயங்கும் ஆன்போர்டு பிராசசர் அனலாக் பயோ-சிக்னல்களை செயல்படக்கூடிய டிஜிட்டல் டேட்டாக்களாக மாற்றுகிறது.
இத்தொழில்நுட்பம் மனிதர்களையும், செயற்கை உறுப்புகளையும் இணைக்கின்றன: நெக்ஸ்டெம்மின், பி.சி.ஐ., தொழில்நுட்பம், எண்ணங்களை செயற்கை உறுப்புகள் மூலம் செயல்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பி.சி.ஐ., என்பது மூளை- - கணினி இடைமுகத்தையும், இ.இ.ஜி., என்பது எலக்ட்ரோ என்செபலோகிராபியையும் குறிக்கிறது. இ.இ.ஜி., -அடிப்படையிலான பி.சி.ஐ., என்பது மூளையின் செயல்பாட்டை அளவிடுவதற்கும், அதை ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்தும் கட்டளைகளாக மாற்றுவதற்கும் எலக்ட்ரோ என்செபலோகிராபி பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும்.
மருத்துவத் துறையில், நரம்பு சீரழிவு நோய்களால் ஏற்படும் பேச்சுக் குறைபாடுகள், ஊனங்கள் அல்லது இயக்கக் கோளாறுகளுக்கு உதவிடவும், கேமிங், பாதுகாப்பு போன்றவற்றிலும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஜூன் 2022-ல், இந்நிறுவனத்தினர் இவர்களின் வி1 ஹெட்செட்டை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தினர். அதில் 'ஆக்மென்டட் என்டர்டெய்ன்மென்ட்' பிரிவில் முதலிடம் பிடித்தனர். தற்போது 'வி2' அதாவது 'வர்ஷன் 2' ஹெட்செட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். 'ஹெட்செட்'கள் விலையும் குறைவாக இருக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப்' கவனம் கொண்டிருக்கிறது.
இணையதளம்: www.nexstem;
இ மெயில்: connect@nexstem.ai.
சந்தேகங்களுக்கு இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 51259
இணையதளம் www.startupand businessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -