sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தஞ்சாவூர், சேலத்தில் 'மினி டைடல்' பூங்கா

/

தஞ்சாவூர், சேலத்தில் 'மினி டைடல்' பூங்கா

தஞ்சாவூர், சேலத்தில் 'மினி டைடல்' பூங்கா

தஞ்சாவூர், சேலத்தில் 'மினி டைடல்' பூங்கா


ADDED : செப் 24, 2024 07:17 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில், 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 'மினி டைடல்' பூங்காக்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை, மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தும் வகையில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில், 'மினி டைடல் பூங்கா' அமைக்கப்படுகிறது.

அதன்படி, தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டி கிராமத்தில், 30.50 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன், 55,000 சதுரடி பரப்பளவில், டைடல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இதை திறந்து வைத்த முதல்வர், இரண்டு நிறுவனங்களுக்கு, தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். இதுவரை, 30 சதவீதம் தள ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகா ஆனைக்கவுண்டன்பட்டியில், 29.50 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்து நிறுவனங்களுக்கு, தள ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இப்பூங்கா கட்டடத்தில், 71 சதவீதம் தளஒதுக்கீடு வழங்கப்பட்டுஉள்ளது. இவ்விரண்டு மினி டைடல் பூங்கா கட்டடங்களில், தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ், ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துாரி ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில், 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 'மினி டைடல்' பூங்காக்களை, முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். உடன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மற்றும் தலைமை செயலர் முருகானந்தம்.

உணவு பொருட்கள்

சோதனை கூடம் திறப்பு

1கோவை மாவட்டம், சூலுார் அடுத்த கருமத்தம்பட்டியில், 4.66 கோடி ரூபாயில், கருணாநிதி நுாற்றாண்டு உணவுப்பொருள் சோதனை கூடம்; திண்டுக்கல், திருச்சி, வேலுார் மாவட்டங் களில், 17.04 கோடி ரூபாயில், நான்கு சேமிப்பு கிடங்கு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன

2தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக் கோட்டை, கடலுார் மாவட்டங்களில், தலா 62.50 லட்சம் ரூபாய் செலவில், 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றையும், கூட்டுறவுத் துறை சார்பில், 15.22 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்

3தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், 110 பேர்; வனத் துறையில் உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு ஒன்பது பேர்; மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணிக்கு 48 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பெரியகருப்பன், ரகுபதி, சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us