தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50: நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தல்

 ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50: நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தல்

 ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50: நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தல்

2


ADDED : ஜூலை 11, 2026 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 02:25 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் புதிதாக நிர்ணயிக்கப்படும் ஆட்டோ கட்டணத்தில், குறைந்தபட்ச கட்டணமாக, 50 ரூபாய் போதுமானது' என, அரசுக்கு, நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

முத்தரப்பு பேச்சு தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகளாகி விட்டது. புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, சென்னையில் முத்தரப்பு பேச்சு நடந்தது. பல்வேறு நுகர்வோர் அமைப்புகளில் இருந்து, 90 பேர் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்கள் தரப்பில், ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 60 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதல் உயர்வு அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப் பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் பால் பர்ணபாஸ் கூறியதாவது:

சென்னை போன்ற பெரிய நகரங்களில், குறுகிய துார பயணத்துக்கு, ஆட்டோவை லட்சக் கணக்கானோர் பயன் படுத்தி வருகின்றனர்.

புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செ ய்யும் போது, குறைந்த பட்ச கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.

டிஜிட்டல் மீட்டர் ஒவ்வொரு கி.மீ.,க்கும், 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும், அரசு அங்கீகாரம் பெற்ற, டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் கட்டாயம் பொ ருத்தப்பட வேண்டும்.

தனியாக செயலி தொடங்கி, அதில், ஆட்டோ முன்பதிவு, கட்டண கணக்கீடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, மின்னணு ரசீது, புகார் பதிவு, ஓட்டுநர் விபரங்கள் மற்றும் நேரடி வாகன இருப்பிடம் போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us