தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சட்டசபை கட்சி தலைவர்களுக்கு வேகமாக தயாராகும் அறைகள்

 சட்டசபை கட்சி தலைவர்களுக்கு வேகமாக தயாராகும் அறைகள்

 சட்டசபை கட்சி தலைவர்களுக்கு வேகமாக தயாராகும் அறைகள்

1


ADDED : ஜூலை 11, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 02:24 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபை கட்சி தலைவர்களுக்கான அறைகளை புனரமைக்கும் பணிகள், தலைமை செயலகத்தில் நடந்து வருகின்றன.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள கோட்டை பழைய கட்டடத்தில், சட்டசபை தர்பார் மண்டபம், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டசபை செயலர் உள்ளிட்ட, துறை செயலர்களின் அலுவலகங்கள் உள்ளன.

எதிர்க்கட்சி


இங்கு, சட்டசபை கட்சி தலைவர்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தற்போதைய சட்டசபையில், த.வெ.க., ஆளும் கட்சியாகவும், தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ளன. மொத்தம், 12 அரசியல் கட்சிகள், சட்டசபையில் இடம் பெற்றுள்ளன.

எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், சட்டசபை கட்சிகளின் தலைவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, முந்தைய ஆட்சியில், அ.தி.மு.க., பயன்படுத்தி வந்த அறை, எதிர்க்கட்சியான தி.மு.க.,வுக்கு தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்த அறை, அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு சிறிதாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சுவரை இடித்து, கழிப்பறை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கோட்டை கட்டடம், தொல்லியல் பாரம்பரிய கட்டடமாக உள்ளது. இங்கு ஏதாவது பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால், தொல்லியல் துறை அனுமதி பெறவேண்டும். ஆனால், அனுமதி பெறாமல், அறைகளை இடித்து கட்டுமானம் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தேவையில்லை


இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாரம்பரிய கட்டடத்தை முழுமையாக சேதப்படுத்துவதற்கும், புனரமைப்பு செய்வதற்கும் மட்டுமே, தொல்லியல் துறை அனுமதி தேவை.

மற்றபடி சிறிய பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி தேவையில்லை. யாருக்கு எந்த அறை ஒதுக்கப்படும் என்பது சபாநாயகர், சட்டசபை செயலர் முடிவிற்கு உட்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us