உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:57 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: பிரசார வேனில் இருந்து, அமைச்சர் ஆனந்த் திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.
‘ரோடு ஷோ’வை நிறைவு செய்து, நேற்று மாலை, தாராபுரம் மாருதி நகருக்கு முதல்வர் விஜய் திரும்பி கொண்டிருந்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள், முதல்வருக்கு, பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினர்.
பிரசார வேனில் வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்களை, மற்றொரு காருக்கு அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கால் இடறியதில், ஆனந்த் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அருகில் இருந்த பாதுகாவலர் ஒருவர், ஓடிச்சென்று ஆனந்தை துாக்கி ஆசுவாசப்படுத்தினார்.
சில நிமிடங்களுக்குப்பின், சகஜநிலைக்கு திரும்பிய ஆனந்த், காரில் ஏறி அமர்ந்து, பயணத்தைத் தொடர்ந்தார்.
