ADDED : நவ 23, 2026 10:51 PM
சென்னை: சென்னையில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில், கீழே தவறி விழுந்த, த.வெ.க., பொதுச்செயலரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்திற்கு தலையில் காயம் ஏற்பட்டது.
சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்வர் விஜய் இன்று (நவ.,23) த.வெ.க., கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து பேசினார்.
அப்போது, முதல்வரின் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் ஆனந்த், அங்கு கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதை அறியாமல், அதன் மீது மோதியதில், கீழே தவறி விழுந்துள்ளார். இதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தோர், தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினார். காயம் ஆறும் வரை ஓய்விலிருக்குமாறு, அமைச்சர் ஆனந்திடம், டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
