ADDED : ஆக 15, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளை கவுரவிக்கும் விழா, நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
இதில், வேலுார், தர்மபுரி உட்பட 20 மாவட்டங்களில், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட, 700க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமியர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீட்கப்பட்ட பெண்களில், கல்வி, சுயதொழிலில் சிறந்து விளக்கும் 11 பேருக்கு, 'ஆளுமை' விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அவர் பேசுகையில், ''வரும் 2030க்குள், இச்சட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தி, கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை மாற்றுவோம்,'' என்றார்.