உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 29, 2026 11:02 PM
ADDED : அக் 29, 2026 10:59 PM
அ நிறம் | அளவு
சென்னை: அமைச்சர் பெயரில், தீபாவளி பண்டிகை பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வசூல் செய்வதற்கு, கனிமவளத் துறையினருக்கு, அத்துறை அமைச்சர் பிரபு தடை விதித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள, அமைச்சர் பிரபு, அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
குவாரி மற்றும் அனைத்து சங்க உரிமையாளர்கள், என் பெயரையோ அல்லது அமைச்சர் அலுவலகத்தின் பெயரையோ பயன்படுத்தி, கனிமவளத்துறை அதிகாரிகள் யாரேனும், தீபாவளி அன்பளிப்பு அல்லது பணம் கேட்டால், வழங்க வேண்டாம். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பணம் வழங்குவோர் என, இரு தரப்பினர் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்கள் அனைத்தையும், உரிய ஆதாரங்களுடன் 9585365217 என்ற ‘வாட்ஸாப்’ எண்ணிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
