UPDATED : ஜூன் 06, 2025 09:53 PM
ADDED : ஜூன் 06, 2025 06:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். தி.மு.க.,வின் மூத்த தலைவரான இவர், கடந்த மாதம் 8 ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு 10ல் வீடு திரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.