sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

7,900 அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்தில் நியமிக்க திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்

/

7,900 அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்தில் நியமிக்க திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்

7,900 அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்தில் நியமிக்க திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்

7,900 அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்தில் நியமிக்க திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்

5


ADDED : மார் 25, 2025 12:48 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:48 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடிகளில், 7,900 பணியாளர்களும், சத்துணவு சமையலர், 8,900 பேரும், ஒரு மாதத்திற்குள் நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:


வி.சி., - பனையூர் பாபு: செய்யூர் தொகுதியில், 333 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், 120 மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அவற்றுக்கு சொந்த கட்டடங்களை கட்டி தர வேண்டும். அங்கன்வாடி மையங்களில், 46 உதவியாளர், 51 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒரு பணியாளர் இரண்டு, மூன்று மையங்களை கவனிக்க வேண்டியுள்ளது. வளம்மிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்தாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 50 பின்தங்கிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஐந்து மி.லி., நெய் மற்றும் நிலக்கடலை வழங்கப்பட்டது.

இது, பிப்ரவரி மாதம் வரை மட்டுமே கிடைத்தது. இந்த திட்டம் தொடருமா?

அமைச்சர் கீதா ஜீவன்: அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் கட்ட, அரசு பரிசீலிக்கும்.

எந்த அங்கன்வாடிக்கு முதலில் கட்ட வேண்டும் என முன்னுரிமை பட்டியலை, எம்.எல்.ஏ., கொடுத்தால் அதன் அடிப்படையில் ஆவன செய்யப்படும்.

காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நெய், நிலக்கடலை வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடர்வது குறித்து, அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.

பா.ம.க., - ஜி.கே.மணி: தமிழகம் முழுதும் அங்கன்வாடி மையங்களில், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இங்கு நீண்ட காலமாக பணியாற்றுபவர்கள் நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு வருகின்றனர். சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளன. இவை நிரப்பப்படுமா?



அமைச்சர் கீதா ஜீவன்: குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடிகளில், 7,900 பணியாளர்களும், சத்துணவு சமையலர் 8,900 பேரும் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒரு மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us