ADDED : ஜன 01, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் துவங்கிய 28 நாட்களில், ஆலையை சீல் வைத்து நிரந்தரமாக மூடிவிட்டனர். அதன் பின் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., மக்களை துாண்டி விட்டது.
திடீரென 100வது நாள் போராட்டம் எனக் கூறி, தற்போது அமைச்சராக இருக்கும் கீதா ஜீவன் தலைமையில் ஊர்வலம் நடத்தினர். ஆனால், ஊர்வலம் முடியும் வரை அவர் அங்கு இருக்கவில்லை; பாதியிலேயே சென்று விட்டார். அதன் பின் தான் துப்பாக்கி சூடு நடந்தது. மக்களை துாண்டிவிட்டு, மக்களை பலியாக்கினார். தூத்துக்குடியில் மக்கள் பலியானதற்கு தி.மு.க.,வே பொறுப்பு.
- கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர்

