ADDED : அக் 02, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், 46, வீடு திரும்பினார்.
அமைச்சர் மகேஷுக்கு ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்கு பின், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையில் உடல் நிலை சீரானதை தொடர்ந்து, வீடு திரும்பினார்.