அ.தி.மு.க.,வின் எழுச்சியால் அமைச்சர் நேருவுக்கு பயம்: வேலுமணி
அ.தி.மு.க.,வின் எழுச்சியால் அமைச்சர் நேருவுக்கு பயம்: வேலுமணி
ADDED : டிச 17, 2024 05:31 PM

சென்னை: '' அ.தி.மு.க.,வின் எழுச்சியால் பயந்துபோய், அமைச்சர் நேரு அறிக்கை வெளியிட்டு உள்ளார், '' என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
தி.மு.க., அமைச்சர் நேரு வெளியிட்ட அறிக்கையில், ' எல்லாம் பயம் மயம் எனச் சீனப் பெருஞ்சுவர் போல், பழனிசாமியின் பயப்பட்டியல் நீள்கிறது', என விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க.,வின் எழுச்சியால் பயந்துபோய் அமைச்சர் நேரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அ.தி.மு.க,.வை பார்த்து பயம் என்ற சொல்லை தி.மு.க., பயன்படுத்துவது வேடிக்கையில் உச்சம்.தெனாலி பட வசனத்தை மேற்க்கோள் காட்டிய தி.மு.க.,வுக்கு நீட் தேர்வு, மேகதாது, ரெய்டு, சட்டசபை, நேரடி ஒளிபரப்பு, டங்ஸ்டன் என்றால் பயம். அரசியல் ரீதியில் பழனிசாமியை எதிர்க்க முடியாமல், தனி மனித தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் வேலுமணி கூறியுள்ளார்.